திருப்பூரில் முன்பணம் வாங்கிவிட்டு வீட்டை வேறொருவருக்கு விற்பனை : அத்துமீறி நுழைந்து வீட்டு பொருட்களை சாலையில் தூக்கி வீசிய சம்பவம்

திருப்பூர் : திருப்பூரில் வீட்டை வாங்குவதற்காக ரூ. 14 லட்சம் முன்பணம் கொடுத்த நிலையில், மற்றொருவருக்கு வீட்டை விற்பனை செய்து விட்டு, வீட்டில் இருந்த பொருட்களை தெருவில் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூரில் வீட்டை வாங்குவதற்காக ரூ. 14 லட்சம் முன்பணம் கொடுத்த நிலையில், மற்றொருவருக்கு வீட்டை விற்பனை செய்து விட்டு, வீட்டில் இருந்த பொருட்களை தெருவில் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் நெகமம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றுகிறார். இவருக்கு திருப்பூர் - தாராபுரம் சாலை சேரன் தொழிலாளர் காலனியில் உள்ள தனது வீட்டை, அதில் வாடகைக்கு இருந்த பழனியப்பன், சரோஜினி தம்பதியினருக்கு கடந்த 2016ம் ஆண்டு விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 14 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார். மேலும், மீதிப் பணம் கொடுத்ததும் பத்திரப்பதிவு செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், மீதி பணத்தைப் பெற்று விட்டு பத்திரப்பதிவு செய்வதை சுப்பிரமணி தவிர்த்து வந்தார். இந்த சூழலில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாராபுரம் வட்டமலை புதூரை சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு அந்த வீட்டை விற்பனை செய்துள்ளார்.

இது குறித்து அறிந்த பழனியப்பன் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், வீட்டை விலைக்கு வாங்கிய சிதம்பரம் 50-க்கும் மேற்பட்டோருடன் பழனியப்பன் குடியிருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்துப் பொருட்களை சாலையில் வீசி எரிந்துள்ளனர். இது தொடர்பாக, சரோஜினி ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...