உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழை : சுற்றுலாப் பயணிகள் அவதி

நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையினால், இயற்கையின் அழகை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையினால், இயற்கையின் அழகை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

உதகையில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், இந்த கால நிலையை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளனர். நேற்று முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பிற்பகல் லேசான மழை பெய்தது. இந்த நிலையில், இன்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் கரம் புரண்டு ஓடுகிறது. மேலும், பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.



 

மேலும், வெளியூர்களில் இருந்து நீலகிரியின் எழில் கொஞ்சும் இயற்கை அழகை காண வந்த சுற்றுலாப் பயணிகள், இந்த மழையினால் ஆங்காங்கே தேங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

இது ஒருபுறம் இருக்க, தற்போது பெய்து வரும் மழையினால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்காது என உள்ளூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...