10 கோடி தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த ஜல்லிக்கட்டு போராட்டம் : 'மெரினா புரட்சி' திரைப்படம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ராஜ் விளக்கம்

கோவை : ஜல்லிக்கட்டு போராட்டம் 10 கோடி தமிழர்களுக்கும் பெருமை சேர்த்ததாக 'மெரினா புரட்சி' திரைப்படம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ராஜ் தெரிவித்தார்.

கோவை : ஜல்லிக்கட்டு போராட்டம் 10 கோடி தமிழர்களுக்கும் பெருமை சேர்த்ததாக 'மெரினா புரட்சி' திரைப்படம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ராஜ் தெரிவித்தார். 

கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அரங்கேறியது. அதாவது, ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வமான அனுமதி கோரி 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது ஒற்றுமையை போராட்டத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்தனர். உலகத்தையே தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இந்தப் போராட்டத்தில், எந்தவொரு தலைவரோ அல்லது அமைப்பின் வழிகாட்டுதலோ இல்லாமல், இளைஞர்கள், குடும்பத்தினர், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க உதவிய இந்தப் போராட்டத்தை மையப்படுத்தி, இயக்குநர் பாண்டியராஜனிடம் உதவி இயக்குநராக இருந்த எம்.எஸ். ராஜ், 'மெரினா புரட்சி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்கிய போது, தான் சந்தித்த பிரச்சனைகள் பற்றி சிம்ப்ளிசிட்டியிடம் தொலைப்பேசியின் மூலம் இயக்குநர் எம்.எஸ். ராஜ் பகிர்ந்து கொண்டார்.



"ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது மக்களின் போராட்டம். தமிழகத்தில் இந்திக்கு எதிராக 1960-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு, இந்த மாதிரியான பெரிய அளவிலான போராட்டம் நடைபெறவில்லை. அதிலும் இந்தி போராட்டத்திற்கு பின்புலமாக அரசியல் கட்சிகள் இருந்தன. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எந்தவொரு தலைவரோ, அமைப்போ இல்லை. இது மக்களின் எழுச்சி. மிகப்பெரிய போராட்டமாக இருந்தாலும் போக்குவரத்துக்கிற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் நடந்த இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த முறை சிறப்பானதாக இருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை, வரும் கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் தற்போது இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்," என்றார் இயக்குநர் எம்.எஸ். ராஜ். 

மேலும், அவர் பேசுகையில், "இந்தப் போராட்டம் ஜனவரி மாதம் நடைபெற்றாலும், டிசம்பர் மாதமே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. யார் இந்தப் போராட்டத்தை தொடங்கியது என கண்டுபிடித்தோம். இந்தப் போராட்டத்தை நடத்தக் காரணமாக இருந்த பெருமை 18 பேரைச் சாரும். ஆனால், அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவர்கள் யார் என்பதை வெளியே கொண்டு வரவில்லை. ஆனால், அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். 

இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கக் காரணமாக இருந்தது யார்..? தடைக்கு பின்னால் இருந்த அரசியல் நகர்வுகள் மற்றும் போராட்டத்தின் இறுதிநாளில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளோம். இந்தப் போராட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆழமான விசாரணைக்குப் பிறகு தீர்வு கிடைத்துள்ளது. எனவே, இந்தப் படத்தை விசாரணை திரைப்படமாகவோ அல்லது விசாரணை ஆவணப்படமாகவோ கருதலாம். இந்தத் திரைப்படம் சென்னை, கோவை மற்றும் மதுரையில் படமாக்கப்பட்டுள்ளது," எனக் கூறினார். 

தொடர்ந்து, இந்தத் திரைப்படத்திற்கு தடையாக இருந்த விவகாரங்கள் குறித்து அவர் பேசியதாவது :- ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா முக்கியக் காரணமாகும். ஆனால், எனது ஆய்வில், ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருப்பதை கண்டேன். மேலும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய பீட்டா கோடி கணக்கில் பணம் பெற்றுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி சென்சார் சான்றிதழுக்காக விண்ணப்பித்து இருந்தேன். செப்., 30-ம் தேதி பீட்டாவிடம் இருந்து எனக்கு நோட்டீஸ் வந்தது. ஆனால், அதைப் பற்றி நான் கவலைகொள்ளவில்லை. இதனிடையே, தணிக்கை வாரியத்தால், 2 முறை சென்சார் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டது. 

இரண்டு முறை சென்சார் மறுக்கப்பட்டு, உயர் நீதிமன்ற தலையீட்டுக்கு பின்னர் 3வது முறை படம் பார்த்த சென்சார் குழு படத்துக்கு யூ சான்று வழங்கியுள்ளது. அதுவும் கடந்த ஜனவரி மாதம் சென்சார் வழங்க ஒப்புக்கொண்டு, 3 மாதங்கள் தாமதப்படுத்தி, இப்போது தான் 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஜனவரி 17-ம் தேதி சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கும். தற்போது சான்றிதழ் கிடைத்துவிட்டதால், வரும் 25-ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. 

பல்வேறு சிக்கல்களை சந்தித்து வெளியாக இருக்கும் 'மெரினா புரட்சி' திரைப்படம், உலக நாடுகளிடையே பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. கனடா திரைப்பட திருவிழாவில் இந்தப் படத்திற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது, என இயக்குநர் எம்.எஸ். ராஜ் கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...