கோவை : சின்னவேடம்பட்டி குளக்கரையை பலப்படுத்தவும் மற்றும் மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் கரைப்பகுதிகளில் மரங்களை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சின்னவேடம்பட்டி குள மறுசீரமைப்பு குழுவினர் சி.டி.எஸ். நிறுவனத்தின் உதவுயுடன் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குளக்கரையைப் பலப்படுத்தவும் மற்றும் மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் இந்த திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, குளக்கரையின் ஒருபகுதியில், மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, பின்னர் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
"வெட்டிவேர் குளக்கரையை பலப்படுத்த மிகவும் உறுதுணையாக இருக்கும். மேலும், மண் அரிப்பு ஏற்படாமலும் தடுக்கும். மண் அரிப்பை தடுப்பதற்கு இது இயற்கையான தீர்வாகும்," என்கின்றார் ஒருங்கிணைப்பாளர்.
இதேபோல, ராஜவாய்க்கால் மற்றும் பிற பகுதிகளில் ராபர்ட் போஸ்ச் நிறுவனத்தின் ஆதரவுடன் தன்னார்வலர்கள் கரைகளில் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.