கோவை : கோவை காரமடை அருகே குட்டையின் நீரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மார்ட்டின் குரூப் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் இறப்பிற்கு அந்நிறுவனத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்ட்டின் ஹோமியபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கரஸ்பான்டன்ட்டும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- மார்ட்டின் குரூப் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டு காலமாக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி கடந்த 3-ம் தேதியன்று மரணமடைந்தார் என்ற செய்தி எங்களை பெருத்த அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது மரணம் குறித்த காரமடை காவல்நிலைய முதல் தகவல் அறிக்கையின்படி, வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்படுத்திய பெருத்த மன உளைச்சல் காரணமாக அவரது இறப்பு ஏற்பட்டது என்ற விபரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. பழனிச்சாமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வரும் நிலையில், காவல்துறையினரும் மற்றும் அவரது மரணம் குறித்து விசாரணை செய்கின்ற அனைத்து தரப்பினரும், இந்த மரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து அவரது மரணத்திற்கான காரணத்தை வெளி கொண்டு வரும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
எனது கணவர் மார்ட்டின் கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் பழனிச்சாமியின் இறப்பு குறித்து தெரிவித்தேன். அவரும் மிகுந்த மனவருத்தம் அடைந்தார். மேலும், அவரது அறிவுறுத்தலின்படி, பழனிச்சாமியின் குடும்பத்தினருக்கு அனைத்து விதத்திலும், ஒத்துழைப்பாகவும், உறுதுணையாகவும் இருப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன், என அதில் குறிப்பிட்டுள்ளார்.