மார்ட்டின் நிறுவன ஊழியர் மரண சம்பவம் : நீதி விசாரணை கோரி ஊர்வலமாக வந்து மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் உறவினர்கள் மனு

கோவை : மார்ட்டின் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலமாக வந்து மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

கோவை : மார்ட்டின் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி ஊர்வலமாக வந்து மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.



லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கோவை ஹோமியோபதி அலுவலகத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வெள்ளியங்காடு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். நாடு முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான அனைத்து அலுவலகங்கள், வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, பழனிச்சாமியிடமும் அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தபட்டது. இந்த நிலையில், பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. 



இதனிடையே, பழனிச்சாமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவருக்கு பல தரப்புகளில் இருந்தும் நெருக்கடி வந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவரது மகன் ரோகின் மற்றும் உறவினர்கள், காசாளர் பழனிச்சாமி உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். மேலும், வருமான வருத்துறை அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியதாகவும், அதேபோல அவர் பணியாற்றி வந்த நிறுவனத்தின் இரு உயரதிகாரிகள் மீது சந்தேகம் இருப்பதாக பழனிச்சாமியின் மகன் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறிய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து ஊர்வலமாக வந்து மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்களை மட்டும் ஐ.ஜி.யை பார்க்க உள்ளே அனுமதித்தனர். ஐ ஜி அலுவலகத்துக்குள் சென்ற அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவிடம் அளித்தனர். அப்போது, காசாளர் தற்கொலை வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல, குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

.

 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...