தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுகிறது அ.தி.மு.க. அரசு : கோவையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கோவை : தோல்வி பயத்தால்தான் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : தோல்வி பயத்தால்தான் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பட்டணம்புதூர், பட்டணம் பகுதிகளில் சூலூர் இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, ஏராளமானோர் ஸ்டாலினோடு செல்பி எடுத்து கொண்டனர். மேலும், ஸ்டாலினுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர், பட்டணம்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் ஸ்டாலின், பொதுமக்களிடம் கலந்துரையாடினார். 

அப்போது அவர் பேசியதாவது :- அ.தி.மு.க. அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்தால் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறி விடும். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உங்களைக் தேடி வர வேண்டும். நீங்கள் அவர்களைத் தேடி போக தேவையில்லை, என்றார்.

இதனிடையே, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் கொடுப்பதாக பட்டணத்தைக் சேர்ந்த குணசேகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதனால் தான் என ஸ்டாலின் பதிலளித்தார்.

தொடர்ந்து, பட்டணம் பகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரண்டு குழந்தைகளுக்கு கண்மணி, அன்பழகன் என பெயர் சூட்டினார். மேலும், கோவை பட்டணம் பொதுமக்களின் குறைகளைக் மனுக்களாக ஸ்டாலின் பெற்றார். இதையடுத்து, பொதுமக்களிடம் மீண்டும் பேசிய ஸ்டாலின், “அடிப்படை வசதிகள் ஏதுமில்லாதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சி தான். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்,” என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...