பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 10 மணி நேரத்தில் மீட்பு : கடத்தல் பெண்ணை கைது செய்து விசாரணை

கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்ட போலீசார், கடத்தல்காரப் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்ட போலீசார், கடத்தல்காரப் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் அருகே நரிக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலன் (40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது பிரசவத்திற்காக தேவி கடந்த 29ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், 45வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது கணவர் உடல் நிலை சரியில்லாமல் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறி தேவியிடம் நன்றாக பழகியுள்ளார். அந்த பெண், பிரசவ வார்டில் இரவில் தங்க ஆண்களுக்கு அனுமதி இல்லையென்பதால், நானே இரவில் தங்கி குழந்தையை கவனித்து கொள்கிறேன் என்று தேவியிடம் கூறியுள்ளார்.

இதை நம்பி அவரும் அனுமதிக்கவே, கடந்த 6 நாட்களாக தேவியின் அருகே இருந்து குழந்தையை அந்த பெண் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் 1.20 மணியளவில் தேவி டிஸ்சார்ஜ் ஆனார். அப்போது, உடன் இருந்து குழந்தையை கவனித்து வந்த அந்த பெண், வெளியே வந்து குழந்தையை தருவதாக கூறி தூக்கி வைத்துள்ளார். பின்னர், மூன்று பேரும் ஒன்றாக மருத்துவமனையில் உள்ள முன்பதிவு மையம் அருகே நடந்து வந்துள்ளனர். இதற்கிடையே, குழந்தைக்கு மருந்து வாங்குவதற்கு தேவியும், பாலனும் மருந்தகத்திற்கு சென்றனர். திரும்பி வந்தபோது, குழந்தையுடன் அந்த பெண் மாயமாகி இருந்தார். எல்லா இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகே அந்த பெண் நாடகமாடி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனால், ஏமாற்றம் அடைந்த தம்பதி இருவரும் கதறி அழுதபடி கிழக்கு ஸ்டேஷன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் ஆங்காங்கே இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பெண், குழந்தையின் உடலில் துணியால் போர்வைபோல் போர்த்தி மருத்துவமனையிலிருந்து வெளியேறி, ஒரு ஆட்டோவில் ஏறி செல்வது பதிவாகியிருந்தது. இதைடுத்து, போலீசார், அந்த ஆட்டோ யாருடையது, அது எங்கு சென்றது, அந்த பெண், குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவரா என்ற கோணத்தில் விசாரித்தனர். 

இதனிடையே, குழந்தையை கடத்திய பெண்ணை திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் குழந்தையை கடத்தியது உடுமலை அருகே உள்ள குருஷிகோட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கசாமியின் மனைவி மாரியம்மாள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாரியம்மாளை கைது செய்த போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குறைபிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டதால் இதனை கணவர் மற்றும் உறவினர்களிடம் மறைக்க குழந்தையை கடத்தி சென்றதாக மாரியம்மாள் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...