கோவையில் விடுமுறை நாட்களை கழிக்க வெளியூர் செல்லும் குடியிருப்புவாசிகளை குறிவைக்கும் கொள்ளையர்கள் : இரு வெவ்வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சாய்பாபாகாலனி மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சாய்பாபாகாலனி மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சாய்பாபாகாலனி அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (50). இவர் கடந்த 30-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலம் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் பழனிச்சாமி சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல, குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் அருகேயுள்ள 6-வது வீதியை சேர்ந்த முகமதுயூனீஸ் (38) என்பவர் கடந்த 1-ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். பின்னர், வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போயுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.



மேலும், விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதும், அதேபோல விடுமுறை நாட்களை கழிப்பதற்காக வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், குடியிருப்புவாசிகள் வெளியூர் செல்வதை அறிந்து, கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, வெளியூர் செல்பவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டு, தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பதுடன், காவல்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிப்பதின் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...