வேட்பாளர்களை மாற்றக்கோரி திமுகவில் தொடரும் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி தேர்தலில்  கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு, கட்சியில் பணியாற்றாதவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறி கோவை மாவட்ட அலுவலகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 53வது வார்டுக்கு திமுக சார்பில்  சாந்தாமணி என்பவர் போட்டியிடுதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர் என்றும், கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட வட்ட கழக செயலாளர் சசிகுமார் மனைவி ஸ்ரீபிரியாவுக்கு சீட்டு வழங்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட திமுகவினர் வடகோவை அருகே உள்ள மாவட்ட அலுவலகத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே,  வட்ட செயலாளர் முருகேசன் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி கழக செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக் அதிமுக அமைச்சர் வேலுமணியிடம் பணத்தை பெற்றுக் கொண்டு 39வது வார்டுக்கு அறிமுகம் இல்லாத காங்கிரஸ் வேட்பாளரை போட்டியிட வைப்பதாக குற்றச்சாட்டினார். இதேபோல் 55வது வார்டுக்கும் கட்சியில் பணியாற்றாதவர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அந்த வார்டு பிரதிநிதி எத்திராஜ் என்பவரும் புகார் தெரிவித்தார். இதற்கிடையே, மாவட்ட செயலாளர் நாச்சிமுத்துடன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற 39வது வார்டு செயலாளர் முருகேசன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...