கோவையைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மாயம்

கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த  கணேசன், செல்வி ஆகியோரின் மகள் ஐஸ்வர்யா (15). இவர் ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஐஸ்வர்யா வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ஐஸ்வர்யாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் செல்வபுரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

இதேபோல்,
கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மகள் சபீதா (19). இவர் சி.எம்.எஸ். கல்லூரியில் முதலாமாண்டு ஆண்டு பி.காம். படித்து வந்தார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்று, வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை  ரமேஷ் பீளமேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...