நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்காக சமூக சேவகர்களாக மாறிய உள்ளங்கள் : பொதுமக்கள் பாராட்டு

கோவை : பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களுக்கு போட்டி போட்டு உதவிய நல் உள்ளங்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கோவை : பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களுக்கு போட்டி போட்டு உதவிய நல் உள்ளங்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் மாணவர்கள், மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில், மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை தேர்வு எழுதுவதற்காக வேகம் வேகமாக வந்த மாணவர்களை சக பெற்றோர்கள் ஆர்வத்துடன் வழியனுப்பினர். மேலும், நீட் தேர்வு விதிகளின்படி மாணவிகளுக்கு உதவும் வகையில் சக பெற்றோர்கள் பல்வேறு உதவிகளை செய்தனர். இதில், கடைசி நேரத்தில் ஹால் டிக்கெட்டை தனது தாயாரிடம் கொடுத்து விட்டு பரிதவித்த மாணவனுக்காக அங்கே கூடியிருந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் செக்யூரிட்டியும் இணைந்து ஓடி ஓடி மாணவனின் தாயை தேடினர். 



அதேபோல, அந்த மாணவனின் ஆதார் கார்டை எடுப்பதற்காக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் உயிரைக் கையில் பிடித்தபடி வாகனத்தை இயக்கி மாணவனை சரியான நேரத்தில் பள்ளிக்கு சேர்த்தார். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த சரவணகுமார் என்ற காவலர் மாணவர் ஒருவர் தேர்வு மையத்தில் இருந்து புகைப்படம் இல்லாமல் வெளியே செல்லும் போது உடனடியாக தன்னிடம் இருந்த 40 ரூபாயை கொடுத்து உதவினார். 



மேலும், ஆதார் தகவல்கள் இல்லாமல் தவித்து வந்த மாணவிக்கு தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களான எட்வின் ராகுல் மற்றும் அசோக் ஆகியோர் உதவினர். 

இப்படி பல்வேறு தரப்பினர் மாணவர்கள் தேர்வுக்காகப்படும் இன்னல்களை சரிசெய்ய தங்களால் முயன்ற உதவிகளையெல்லாம் செய்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...