கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பழங்குடி தம்பதியை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்ற கடத்தல்கார பெண்ணை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலன் மற்றும் தேவி தம்பதியினர். பழங்குடி மக்களான இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மூன்றாவது பிரசவத்துக்காக ஏப்ரல் 29-ம் தேதி மாலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அன்று இரவே இந்த தேவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்படியிருக்க இவர்களுக்கு அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் இவர்களிடம் வந்து, என் கணவரை சிகிச்சைக்காக இதே மருத்துவமனையில் தான் அனுமதித்துள்ளதாகவும், ஆனால், அங்கு ஆண்கள் மட்டுமே தங்க முடியும். எனவே, நான் இங்கு தங்கியிருந்து குழந்தையையும் பார்த்துக்கொள்கிறேன் என்றுள்ளார்.
இதற்கு தேவியின் குடிம்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்படும்போது, அந்தப் பெண் குழந்தைக்கு காதில் கொப்புளம் உள்ளது. காது டாக்டரிடம் காட்ட வேண்டும் என்றுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணும், பாலனும் குழந்தையை காட்ட காது டாக்டரிடம் சென்றுள்ளனர். அங்கு சென்ற பிறகு குழந்தைக்கு சொட்டு மருந்து வாங்கி வர குழந்தையின் தந்தை பாலனை அனுப்பியுள்ளார். பின்னர், அவர் சென்ற நேரத்தில் அந்தப் பெண் குழந்தையை கடத்தி சென்றுவிட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து, பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசில் புகார் அளித்தனர். பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.