கோடை சீசனையொட்டி உதகையில் நடந்த 127-வது நாய் கண்காட்சி இன்றுடன் நிறைவு

நீலகிரி : உதகையில் 3 நாட்கள் நடைபெற்ற 127-வது நாய்கள் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தன.

நீலகிரி : உதகையில் 3 நாட்கள் நடைபெற்ற 127-வது நாய்கள் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தன.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கைளச் சார்ந்த 53 இனங்களைச் சார்ந்த 340 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பொமோரியன், டால்மேஷன், ராஜபாளையம், கிரேட் டேன், டஷ் ஹவுண்ட் உள்ளிட்ட பல்வேறு நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.



நாய்களுக்கான கீழ்படிதல் போட்டியில் காவல்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான நாய்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தின. மேலும், நாய்களின் அணிவகுப்பு, மோப்ப சக்தி உள்ளிட்ட தனி திறமைகளை இதில் கலந்து கொண்ட நாய்கள் வெளிப்படுத்தின. இறுதி நாள் என்பதால் அனைத்து ரக நாய்களும் கலந்து கொண்டன. 



இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து சென்றனர். வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...