மேட்டுப்பாளையம் அருகே வேளாண் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : விவசாயிகள் கவலை

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை புகுந்து கரும்பு , வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


கோவை : மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை புகுந்து கரும்பு , வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்த தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காட்டுயானை கூட்டம் ஒன்று விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள யானை உள்ளிட்ட வன விலங்குகள் வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் இந்த யானை கூட்டம், இன்று அதிகாலை மணல் புதூர் மற்றும் தோலம்பாளையம், மேல்பாவி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து ஒரே இரவில் புகுந்து ஒரு ஏக்கர் அளவிலான கரும்பு பயிரினையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாய்த்து சேதப்படுத்தியது. 



இதனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், வறட்சி காலம் என்பதால் தொடர்ந்து வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, வனத்துறை மீண்டும் வனவிலங்குள் நுழையாதவாறு உரிய நடவடிக்கை எடுப்பதுடன் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...