திருப்பூர் : கம்யூனிசத்தின் தந்தை என்றழைக்கப்படும் காரல் மார்க்சின் 201-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுவுடமை இயக்கத்தை துவங்கியதில் முதன்மையானவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படும் காரல் மார்க்சின் 201-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் பி.என். சாலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகம் முன்பு காரல் மார்க்சின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தொழிலாளர்களுக்கு விரோதமான கார்ப்பரேட்டுக்களுக்கு ஆதரவான அரசை அகற்ற பாடுபடுவோம், காரல் மார்க்ஸ் குறிப்பிட்ட தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என உறுதிமொழி ஏற்று சமாதான புறாக்களை பறக்கவிட்டனர்.

இதில், ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.