தோல்வி பயத்தால் அரசியல் நிலைபாட்டை மாற்றிக் கொண்டார் பிரதமர் மோடி : கோவையில் கே.எஸ். அழகிரி விமர்சனம்

கோவை : தோல்வி பயத்தால் அரசியல் நிலைபாட்டை மாற்றிக் கொண்டார் பிரதமர் மோடி என கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.


கோவை : தோல்வி பயத்தால் அரசியல் நிலைபாட்டை மாற்றிக் கொண்டார் பிரதமர் மோடி என கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.



சூலூர் இடைத்தேர்தலுக்கான மதசார்பற்ற வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 



பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- பிரதமர் மோடி தோல்வி பயத்தால் தனது அரசியல் நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். சொல்வதற்கு பா.ஜ.க. ஆட்சியில் சாதனைகள் ஏதும் இல்லை. ஆதலால் ராகுல் காந்தியை வெளிநாட்டவர் என்று சொல்லி அரசியல் செய்கின்றனர். புல்வாமா சம்பவத்தில் ராணுவ நடவடிக்கைகளை மோடி மாற்றி அமைத்ததே வீரர்கள் உயிர் பலிக்கு காரணம். தமிழிசை சௌந்திரராஜனுக்கு வரலாறு தெரியவில்லை. தானே புயலுக்கு காங்கிரஸ் ஆட்சியின்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேரில் பார்வையிட்டார். கஜா புயலுக்கு பா.ஜ.க. சார்பில் ஒரு நிர்வாகி கூட வாயை திறக்கவில்லை.

நீட் தேர்வில் காங்கிரஸ் தெளிவாக உள்ளது. பா.ஜ.க. போல் மாநிலங்களுக்கு எதிராக செயல்படாது.

மூன்று எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் என்பது ஜனநாயக போக்கு கிடையாது. மோடியுடன் சேர்ந்து எடப்பாடி அரசும் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மத்தியில் அமைச்சரவை அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும். அதனால், உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பது அந்தந்த மாநிலங்களில் தேர்வுகளை நடத்தி பணியில் அமர்த்தப்பட வேண்டும், என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...