திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்தி கொலை : போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் குடியிருந்து கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவர், தினந்தோறும் பி.என். சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் இருந்து கட்டிட வேலைக்கு ஆட்களை அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில், ஆட்களை அழைத்து செல்வதில் இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கு சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம்போல, ஆட்களை அழைத்துச்செல்ல வந்த ஆரோக்கியசாமியை இடைமறித்த 4 பேர் கொண்ட கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோக்கியசாமியின் வயிறு மற்றும் கழுத்துப்பகுதியில் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். 



கத்தியால் குத்தியதில் நிலைதடுமாறி விழுந்த ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்த கட்டிட தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...