நீலகிரி : கோத்தகிரி அருகே விபத்தில் சிக்கிய சுற்றுலா வேனில் இருந்தவர்களை நமது மேட்டுப்பாளையம் குழு நிர்வாகிகள் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நேற்று மாலை 5.50 மணியளவில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த குடும்பத்துடன் டூரிஸ்ட் வேனில் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களது வாகனம் கோத்தகிரி மலைப்பாதையில் வந்து கொண்டிருக்கும் போது, பிரேக் பழுதின் காரணமாக முன்னே சென்று கொண்டிருந்த காரின் மீது பயங்கரமாக மோதி, சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த சமயத்தில், கோத்தகிரியில் இருந்து வந்த நமது மேட்டுப்பாளையம் குழு நிர்வாகிகள், விபத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்டு முதலுதவிகள் மேற்கொண்டனர். அந்தப்பகுதியில், செல்போன் சிக்னல் இல்லாத்தால், மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற வாகனத்தின் உதவியுடன் காவல்நிலையத்திற்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள் அங்கு இருந்த கால்டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் வேன் ஓட்டுநர்களின் உதவியால் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களும், அவர்களது உடமைகளும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்தினால், கோத்தகிரி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் நமது மேட்டுப்பாளையம் குழுவினர் இணைந்து சீர்படுத்தினர்.

மேலும், விபத்தில் சிக்கிய காரை எடுத்துச் செல்ல ரெக்கவரி வேன் வர கால தாமதமானதால், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டேண்ட் டூரிஸ்ட் கார் ஓட்டுனர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் உதவியால், அந்தக் கார் மலைப்பகுதியில் இருந்து கீழே எடுத்து வரப்பட்டது.