இருகூர் சந்தை பகுதிகளில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் நடைபயணமாக பிரச்சாரம்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இருகூர் சந்தை பகுதிகளில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார்.


கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இருகூர் சந்தை பகுதிகளில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். 



தமிழகத்தில் உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று இரவு கோவை விமான நிலையம் வந்தார்.



அதனைத் தொடர்ந்து, இன்று காலை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருகூர் பகுதியில் உள்ள சந்தையில் நடைபயணம் மேற்கொண்டு, அங்கு உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். 



அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 



தொடர்ந்து, அவர் அந்தப் பகுதி மக்களிடம், பொங்கலூர் பழனிச்சாமிக்கு உங்களது பொன்னான வாக்குகளை தாருங்கள் என்றும், ஆட்சி மாற்றம் ஏற்படும், அப்பொழுது உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க தயாராக உள்ளதாகக் கூறினார். எனவே, உதயசூரியன் சின்னத்திற்கு உங்களது வாக்குகளை தாருங்கள் என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...