காஞ்சிபுரத்தில் 108 மாணவர்களின் மருத்துவப் படிப்பு தொடர உதவிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்

காஞ்சிபுரம் : தனியார் மருத்துவக் கல்லூரி மூடப்பட்டதால், கல்வியை இழந்து தவித்து வந்த 108 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.

காஞ்சிபுரம் : தனியார் மருத்துவக் கல்லூரி மூடப்பட்டதால், கல்வியை இழந்து தவித்து வந்த 108 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் மணமைநல்லூரில், தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு ஏராளமான மாணவ, மாணவியர் மருத்துவம் பயின்று வந்தனர். இந்திய மருத்துவக் கல்லூரியின் விதிகளையும் நிபந்தனைகளையும் கல்லூரி நிர்வாகம் முறையாகப் பின்பற்றாததால், இந்தக் கல்லூரியின் அங்கீகாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கைக்கும் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், `இந்தக் கல்லூரியில் படிக்கும் 108 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கவேண்டும்' என உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

இதனால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலினை மாணவர்கள் நாடினர். ஸ்டாலின் முயற்சியால் 108 மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 

இதுதொடர்பாக தி.மு.க சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் எம்.எல்.ஏ ஆகியோரின் முயற்சியில், ‘பொன்னையா இராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 108 மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 10 நாள்களுக்குள் மாற்றிட இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு முன்மொழிவுகள் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு இன்று வரை பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்காததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. 

மு.க.ஸ்டாலினிடம், பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பொன்னையா இராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 108 மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவர்களுக்கு உடனடியாக இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் - சுகாதாரச் செயலாளருக்கும் - தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தருக்கும், தி.மு.க சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி மற்றும் தலைமை நிலையச் செயலாளர் கு.க. செல்வம் ஆகியோரின் முயற்சியில், ‘பொன்னையா இராமஜெயம் மருத்துவக் கல்லூரி’யில் மருத்துவக் கல்வி பயின்று வந்த 108 மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது''எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...