நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு : தேர்வுக்கான கட்டுப்பாடுகள் என்ன என தெரியுமா...?

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், தேர்வெழுத தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், தேர்வெழுத தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே 14 நகரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்வு நடைபெற உள்ள நிலையில், மதியம் 12.30 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்க வேண்டுமென தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. தேர்வுகுறித்த முக்கிய நடைமுறைகள், ஹால் டிக்கெட் பரிசீலனை என அனைத்தும் முடிவடைந்து, 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு வழங்கப்படும்.ஆள் மாறாட்டத்தை தடுக்க வருகை பதிவுத்தாளில், மாணவர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும். மாலை 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது.

தேர்வெழுத பால்பாயின்ட் பேனா ஒன்று தேர்வு மையத்திலேயே வழங்கப்படும் என்பதால், பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் என எதுவும் கொண்டு செல்லக் கூடாது. இவை தவிர, மொபைல் போன், பென்டிரைவ், புளூடூத், கை கடிகாரம், காதணி, வளையல் போன்ற ஆபரணங்களுக்கும் அனுமதி இல்லை. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மென்மையான அரைக்கை சட்டை அணியலாம். மாணவிகள் முழுக்கை சுடிதார் அணியக் கூடாது. ஷூ அணிவதற்கு பதிலாக லோ ஹீல்ஸ் காலணி மற்றும் சாதாரண காலணிகள் மட்டுமே அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...