கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, கோவை அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் நேற்று லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை நடக்கும் போது தங்கள் தரப்பு ஆட்கள் இருக்க வேண்டும் என அவரது மகன் ரோகின் குமார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், இதனை விசாரித்த நீதிபதி, ஆர்.டி.ஓ. தலைமையில் இறந்தவரின் சார்பில் ஒரு மருத்துவரை நியமித்து பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் அனுமதி அளித்தார்.

இதனையடுத்து, பழனிச்சாமியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
காசாளர் பழனிச்சாமியின் மரணத்திற்கு காரணம் வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் என்றும், மேலும், அவர் பணிபுரிந்த அலுவலக ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவரது மகன் ரோகின் குமார் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.