கோவையில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 220 கிலோ மாம்பழங்கள் அழிப்பு

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 220 கிலோ எடையுள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.


கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 220 கிலோ எடையுள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். 



கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ரசாயன முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை செய்வதாக கோவை மாவட்ட நியமன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் குழு மாம்பழ குடோன் மற்றும் சில்லறை கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 



இதில், கோவை - சக்தி சாலையில் உள்ள கணபதி பகுதியில் 4 மாம்பழ விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 220 கிலோ மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவை அனைத்தும் குப்பையில் கொட்டி முறைப்படி அழிக்கப்பட்டது. தொடர்ந்து, இது போன்ற செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களை விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனிடையே, உணவு சம்பந்தமான புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...