நீலகிரி : கோத்தகிரியை அடுத்துள்ள உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடி அருகில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக் காலத்தில் பலாப்பழ சீசனையொட்டி, குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஆதிவாசி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக குஞ்சப்பனை சோதனை சாவடி மற்றும் மாமரம் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் சாலையோர பகுதிகளிலும், தோட்டங்களிலும் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
எனவே, வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். யானைகளைக் கண்டால் ஒலிப்பான் ஓலிப்பதை தவிர்க்க வேண்டும். யானைகளுக்கு தொல்லை அளித்தல் கூடாது. மேலும், சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு அருகே சென்று செல்போனில் "செல்பி" எடுக்க முயற்சிக்கக் கூடாது, என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.