கோவை : வருமான வரித்துறையின் விசாரணைக்குப் பிறகு, மார்ட்டின் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உயிரிழந்த காசாளரின் மகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக காசாளர் பழனிச்சாமியின் மகன் ரோகின் குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார். எனது தந்தையின் கொலையில் மார்ட்டின் நிர்வாகத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் இருவர் மீது சந்தேகம் உள்ளது. மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள், எனது தந்தையை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினர்.

எனது தந்தையை வருமான வரித்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதும், கடுமையான வார்த்தைகளால் திட்டியதையும் நான் என் கண்களால் பார்த்தேன். வருமான வரித்துறையில் 7 பேர் வந்தனர். அதில், ராஜன் என்பவர்தான் எனது தந்தையை அடித்தார். உடற்கூறாய்வு செய்யாமல் உடலை வாங்கமாட்டோம். மேலும், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும், இவ்வாறு கூறியுள்ளார்.