கோவை : பிளஸ் 1 மாணவர்களின் சேர்க்கை குறித்து ஏதேனும் புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-19-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகராட்சி/ அரசு நிதி உதவி பெறும்/ சுயநிதி/ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகளிலும் 11-ம் வகுப்பு சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பில் சேர்க்கை அளிக்கப்பட வேண்டும்.
2019-20-ம் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் போது, தற்போது நடைமுறையில் உள்ள இனவாரியாக ஒதுக்கீட்டின்படி பாடவாரியாக சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் சேர்க்கையின் போது, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டினை பின்பற்றி கண்டிப்பாக சேர்க்கை அளிக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் சேர்க்கை சம்பந்தமாக பள்ளிகள் மீது புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டாலோ விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.