உள்ளாட்சித் தேர்தல் நடத்த இன்னும் 3 மாதம் அவகாசம் வேண்டும் : தமிழக அரசு பதில் மனு

சென்னை : உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட இன்னும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை : உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட இன்னும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், தற்போது வரையிலும் தேர்தல் நடைபெறவில்லை. இதனால், உள்ளாட்சிப் பணிகள் பாதிப்படைகிறது, என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணையின் போது, வார்டு வரையறை பணிகள் முடிவடையாமல் இருப்பதால் கூடுதலாக 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் சார்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், "நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால், தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற முடியவில்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே தான், உள்ளாட்சித் தேர்தலை தற்பொழுது நடத்த முடியாத சூழல் உள்ளது. மேலும், உள்ளாட்சிப் பணிகளை மக்கள் நல பணியாளர்கள் கவனித்து வருகிறார்கள். அதனால், எந்தவொரு பணியும் பாதிப்படையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...