பொள்ளாச்சி அருகே குடியும், கும்மாளத்திலும் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது : சொகுசு விடுதிக்கு சீல் வைக்க ஆட்சியர் அதிரடி உத்தரவு

கோவை : பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவர்களுக்கு போதை விருந்தை ஏற்பாடு செய்த முறையான அனுமதியின்றி இயங்கி வந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.


கோவை : பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவர்களுக்கு போதை விருந்தை ஏற்பாடு செய்த முறையான அனுமதியின்றி இயங்கி வந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார்.



சேத்துமடை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேளிக்கை சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கோவையில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர், நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொகைன், போதை ஊசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். 



இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்கள் 159 பேரை கைது செய்தனர். அதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, இவர்களது சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, சொகுசு விடுதி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். 



இந்த நிலையில், போதை விருந்தை ஏற்பாடு செய்த முறையான அனுமதியின்றி இயங்கி வந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அதிரடியாக உத்தரவிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...