திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் அளித்துள்ள நிலையில், தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மத்திய அரசை கண்டித்தும், '#தமிழக வேலைத் தமிழருக்கே' என்ற ஹெஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ரயில்வே துறையில் தமிழர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. அதில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால், தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையில் 2,600 பணியிடங்களில் 2,300 பேர் வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதேபோல, தமிழகத்தில் உள்ள 18 பொதுத்துறை நிறுவனங்களில் இங்குள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் பணியும், அதேநேரத்தில் வட மாநிலத்தவர்களுக்கு 90 சதவிகித பணியும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து நேற்று பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், இதற்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
'தமிழக வேலை தமிழருக்கே'
அதில், மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், இந்தியைத் திணிப்பதன் ஒரு பகுதியாக இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. அரசு அதைச் செய்து வருவதாகவும் பதிவாகியுள்ளது. இதை எதிர்க்கும் விதமாக நெட்டிசன்கள் '#தமிழக வேலைத் தமிழருக்கே' என்ற ஹெஸ்டேக்கையும் உருவாக்கியுள்ளனர்.
அதோடு, ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கண்டனக் குரல்களைப் பதிவு செய்வதோடு, அதுகுறித்த பதிவுகள் மற்றும் புகைப்படங்கள், வட மாநிலத்தவருக்கு வழங்கப்பட்ட பணியின் புள்ளிவிவரங்கள் போன்றவற்றையும் தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.