லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தல் : காவல்துறையினரிடம் குடும்பத்தினர் வாக்குவாதம்

கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் காசாளர் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் காசாளர் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கோவை ஹோமியோபதி அலுவலகத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி என்பவர் நேற்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வெள்ளியங்காடு குளத்தில் சடலமாக மீட்கப்ப்பட்டார். ஏற்கனவே, கடந்த மூன்று நாட்களாக நாடு முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான அனைத்து அலுவலகங்கள் வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, பழனிச்சாமியிடமும் அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தபட்டது. இந்த நிலையில், நேற்று பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கபட்டுள்ளது. 



இதனிடையே, பழனிச்சாமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவருக்கு பல தரப்புகளில் இருந்தும் நெருக்கடி வந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவரது மகன் ரோகின் மற்றும் உறவினர்கள், காசாளர் பழனிச்சாமி உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று பழனிச்சாமியின் உடலை கோவைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலை வழக்காகப் பதிவு செய்த பின்னர் தான், பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த கியூ பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவரின் செல்போன் உடைக்கபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...