நீலகிரி : உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமா, 15 ஆயிரம் மலர்களில் பட்டாம்பூச்சி வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி ஸ்பாட் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் 3 லட்சத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இந்தாண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மட்டும் நடைபெறும் எனவும், மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர பூங்கா நிர்வாகம் 15 ஆயிரம் மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி உருவம் வடிவமைத்துள்ளது. இது, சுற்றுலாப் பயணிகள் சுய புகைப்படம் (செல்ஃபி) எடுக்க உருவாக்கப்பட்டுள்ளது.
இது பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதோடு, ஆர்வத்துடன் அதன் முன் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.