Breaking: Breaking: பொள்ளாச்சி அருகே விடுதியில் அதிகாரிகள் திடீர் சோதனை : தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்?

கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள விடுதியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கொகையின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள விடுதியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கொகையின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேத்துமடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேளிக்கை சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. வார இறுதியை கொண்டாடுவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து இங்கு வந்து கொண்டாடி செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இந்த சொகுசு விடுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிலர் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி, அக்கம்பக்கத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், இது தொடர்பாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். 



இதையடுத்து, சம்பந்தப்பட்ட விடுதியில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கொகைன், போதை ஊசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தொடர்ந்து, சோதனை நடத்தி வரும் போலீசார், அங்கு கேளிக்கை கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதியின்றி நடத்தப்பட்டு வரும் இந்த சொகுசு விடுதியில், கொண்டாட்டம் என்ற பெயரில் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது அங்குள்ள பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...