கோவை : வருமான வரித்துறையின் விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்ட லாட்டரி அதிபர் மார்டினின் நிறுவன காசாளர் தண்ணீர் குட்டையில் சடலமாக கண்டெடுக்கபட்ட நிலையில், தனது தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்தேக்க குட்டையில் லாட்டரி அதிபர் மார்டினின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. இறந்து போன பழனிசாமி, மார்டினிடம் கடந்த பல ஆண்டுகளாக காசாளராக பணியாற்றி வருந்துள்ளார். அண்மையில் நாடு முழுவதும் மார்டினுக்கு சொந்தமான பல்வேறு அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இது குறித்த விசாரணைக்காக பழனிசாமியை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றதாகவும், விசாரணைக்கு பின்னர் நேற்று அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வருமானவரித்துறையின் அடுத்தகட்ட விசாரணைக்கு பயந்து பழனிசாமி தற்கொலை செய்திருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.

பழனிசாமியின் வீடு கோவை அருகே உள்ள உருமாண்டம்பாளையம் பகுதியில் உள்ள நிலையில், நேற்று காலை தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் ரோவின் மற்றும் உறவினர்கள் பழனிசாமியின் உடலை கண்டு அழுதனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமியின் மகன் ரோகின், “எனது தந்தையை வருமானவரித் துறையினர் கடந்த மூன்று நாட்களாக விசாரித்தனர். அப்போது, எங்கள் வீட்டிற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரி ஒருவர், அவரை அடித்து துன்புறுத்தியதை நான் பார்த்தேன். இதனை என்னிடம் வேதனையுடன் தெரிவித்தார். பின்னர், நேற்று இரவு எனது தந்தையை விடுவித்தனர். மேலும், எனது தந்தையின் அலுவலகத்தில் அவருடன் வேலை பார்க்கும் மூன்று பேர் மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. சோதனை நடத்தும் போது அவரை வேண்டுமென்றே வெளியில் அனுப்பியுள்ளனர். இதனாலேயே, எனது தந்தையிடம் விசாரனையில் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது, எனவே, நீதிமன்ற மேற்பார்வையில் எனது தந்தையின் உடலை பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.