கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தொகுதியின் அடிப்படை தேவைகள் பற்றிய பட்டியலை அத்திக்கடவு - கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ளது.

அதாவது :- சூலூர் தொகுதிக்குட்பட்ட நீர்வழிப்பாதையை தூர்வாரி, ஏரி பலப்படுத்தவும், தடுப்பணைகள் சீர்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கௌசிகா நதி பாதையில் உள்ள உள்ளர்ட்சி அமைப்புகளின் கழிவுநீரை சுத்திகரித்து, நதியின் கரை ஓரங்களில் நாட்டு மரங்களை நடவு செய்ய வேண்டும். கௌசிகா குளம் புனரமைக்கப்பட வேண்டும்.
கௌசிகா நதியின் அரசூர் - கணபதிபாளையம் கிளை ஓடையை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும். அத்திக்கடவு 2-வது திட்டத்தில் சின்னவேடம்பட்டி ஏரி சேர்க்கப்பட்டுள்ளதைப் போன்று, சின்னியம்பாளையம், நீலம்பூர், முதலிபாளையம், அரசூர், கணியூர், பொத்தியம்பாளையம் பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளையும் அத்திக்கடவு நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
சோமனூர் பகுதிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். கருமத்தம்பட்டியில் கிரே காட்டன் ஜவுளி சந்தை ஏற்படுத்தி தர வேண்டும். சோமனூர் ரயில்நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கருமத்தம்பட்டி, தென்னம்பாளையத்தில் குடிநீர் மற்றும் பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.கருமத்தம்பட்டியில் அரசு கொள்முதல் நிலையம், குளிர்பதன கிடங்குகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.