கோவை : இருகூரில் 30 படுக்கைகள் கொண்ட தரமுள்ள மருத்துவமனை கொண்டு வரப்படும் என சூலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, இருகூரில் பிரச்சாரம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதியளித்துள்ளார்.
கோவை : இருகூரில் 30 படுக்கைகள் கொண்ட தரமுள்ள மருத்துவமனை கொண்டு வரப்படும் என சூலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, இருகூரில் பிரச்சாரம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதியளித்துள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து, இருகூரில் பிரச்சாரம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது :- சூலூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால், இந்தப் பகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்த்து, மத்திய, மாநில அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வந்து சேர்ப்பார். இதற்கு முன்பாக இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவரும், தற்போது உள்ள வேட்பாளர் கந்தசாமியின் சகோதரரான கனகராஜ், இந்தப் பகுதியில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். ஜெயலலிதா திட்டங்களுக்கு அறிவித்த நிதியை விட தற்போது அதிகரித்து தான் கொடுக்கிறோம்.

இருபருவ மழை பொய்த்ததால் ஏழை மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் கொடுக்கும் திட்டத்தை அ.தி.மு.க. அறிவித்தது,. ஆனால், அதை தடுத்தது தி.மு.க.. அ.தி.மு.க. அரசு அடுத்தடுத்து பல்வேறு அறிவித்து செயல்படுத்தி வருவதால், தி.மு.க.வினருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன வழங்கியதன் மூலம், ஆண்களை பின்னால் உட்கார வைத்து ஓட்டுகிறார்கள் பெண்கள். சோசிலியஷத்தை உருவாக்கியவர் ஜெயலலிதா. முழு உணவு பாதுகாப்பை மக்களுக்குத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
இதுவரை 6 லட்சம் கான்கிரட் வீடுகள் ஏழை மக்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ளது. 2023-க்குள் அனைத்து குடிசைவாழ் மக்களுக்கும் தரமான கான்கிரட் வீடு கட்டித் தரப்படும். திருமண நிதி உதவி, பேறுகால நிதி உதவி ஆகியவை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிந்தால் அ.தி.மு.க. இருக்காது என அழகிரி கூறுகிறார். ஆனால், இவ்வளவு நாள் அழகிரி எங்க இருந்தார் என்றே தெரியாது. காங்கிரஸ் தமிழகத்தில் காணாமல் போய் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. பூத கண்ணாடியை வைத்து தான் காங்கிரஸ் கட்சியை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களிடம் எந்த சுயநலமும் இல்லை,. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் செயல்படுகிறோம்.

இந்த தேர்தலில் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். எதிர்கட்சிகள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும். அப்ராணியான, பால் வடியும் முகம் கொண்ட நமது வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கந்தசாமி இந்த தொகுதிக்கு சொந்தக்காரர், மற்றவர்கள் (மற்ற வேட்பாளர்கள்) இறக்குமதி செய்துள்ளனர். சூலூர் தொகுதியில் அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது என தெரிந்து வெளியூர் ஆட்களை நிற்க வைத்துள்ளனர்.
இருகூர் ரயில்நிலையம் மேம்படுத்தப்படும். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை வசதிகள் கொண்ட தரமுள்ள மருத்துவமனையாகக் கொண்டு வரப்படும். அம்மாவோடு 32 ஆண்டுகள் இருந்து, அவரை காப்பாற்றாதது யார்..?, தினகரன் குடும்பம் தான். 47 ஆண்டுகால சரித்திரத்தில் துரோகம் செய்து, தனி சாதி கட்சி ஆரம்பித்தவர்கள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை (தினகரனை விமர்சனம்). சில அரசியல் வியாபாரிகள் தினகரனுடன் சேர்ந்து இருக்கலாம்.

இந்த தேர்தலோடு அ.தி.மு.க. காணாமல் போகும் என ஸ்டாலின் கூறுகிறார். கட்சியை முறியடிக்கக் கருணாநிதி செய்த சதி எல்லாம் முறியடித்தவர் ஜெயலலிதா. சுனாமி வந்தாலும், புயல் வந்தாலும் இந்த கழகம் அசையாது, யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. இருவரும் (டி.டி.வி & ஸ்டாலின்) ஜோசியகாரராக மாறிவிட்டனர். 23-ம் தேதிக்குப் பின்னர் இந்த ஆட்சி இருக்காது என கூறி வருகின்றனர். அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தில் சாதி சண்டை இல்லை, மத கலவரம் இல்லை. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு தரும் மாநிலம் தமிழகம்தான், எனக் கூறினார்.