உதகையில் இன்று முதல் 5-ம் தேதி வரை நடக்கும் நாய்கள் கண்காட்சி : நாடு முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு

நீலகிரி : உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் நாய்கள் கண்காட்சியில், நாடு முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.

நீலகிரி : உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் நாய்கள் கண்காட்சியில், நாடு முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன. 



நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை விழாவினை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, மலர்கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. இன்று முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டுள்ளன. கீழ்படிதல், சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெற்றி பெறும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.



இந்தப் போட்டியில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய பங்காற்றிய போலீஸ் மோப்ப நாய் பென்னி மற்றும் உயர்வகை கோல்டன் ரிட்ரீவர் வகை நாய்கள், லேபர் டாக் உள்ளிட்ட பல்வேறு நாய்கள் கலந்து கொண்டன. 



இதில், வெற்றிபெறும் நாய்களுக்கு இறுதிப் பரிசு வரும் 5-ம் தேதி வழங்கப்படவுள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...