சூலூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி தீவிர பிரச்சாரம்

கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஜி. மயில்சாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஜி. மயில்சாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 



தமிழகத்தில் சூலூர் உள்பட 4 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, சூலூர் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஜி. மயில்சாமியும் இன்று பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். 



"இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் சூலூரில் உள்ள இரு குளங்களையும் தூய்மைப்படுத்துவதுடன், இங்குள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். சூலூர் தொகுதியை பசுமை வாய்ந்த சுற்றுச்சூழல் நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டுமானால், வாக்காளர்கள் டார்ச் லைட்டிற்கு வாக்களிக்க வேண்டும்," என்றார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமி.



தொடர்ந்து, மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்தும் திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும், சூலூர் தொகுதியில் நீடித்து வரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி, தூய்மையான குடிநீரை சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

இதனிடையே, சூலூர் இடைத்தேர்தலின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வரும் 10-ம் தேதி கோவை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...