நீலகிரி : கல்வாரி என்றழைக்கப்படும் காந்தள் குருசடி திருத்தலத்தின் 80-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நல்லாட்சி அமைந்து நாட்டு மக்கள் வளமுடன் வாழவும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தள், முக்கோணம் பகுதியில் அமைந்துள்ளது கல்வாரி என்றழைக்கப்படும் குருசடி திருத்தலம். இயேசு கல்வாரியில் சுமந்த உண்மையான திருச்சிலுவையின் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ள சிறப்புமிக்க இத்திருத்தலத்தின் 80-ம் ஆண்டு பெருவிழா இன்று நடைபெற்றது. கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இப்பெருவிழா இன்று உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இந்த திருப்பலியில், நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் நடக்கவுள்ள இடைத்தேர்தல் ஆகியவற்றை முடிந்து, நல்லாட்சி அமைந்து, நாட்டு மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்றும், தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலய பங்கு தந்தைகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர்.