ராமலிங்கம் கொலை வழக்கு : கைது செய்யப்பட்டவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பது அம்பலம்

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவு நோட்டீஸ் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவு நோட்டீஸ் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பா.ம.க. திருபுவனம் முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் (45), என்பவர் கடந்த பிப்., 5-ம் தேதி இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பின்தங்கிய மக்கள் குடியிருப்பில் இஸ்லாமியர்கள் சிலர் மதமாற்றம் செய்து கொண்டிருக்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடுத்து நிறுத்தியதால், அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகின்றனர். 

கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய நகரங்களில் உள்ள எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் என மொத்தம் 20 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனையை நிகழ்த்தியது. 

இந்த சோதனை தொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை நிகழ்த்தப்பட்டது. சோதனையில், 16 மொபைல் போன்கள், 21 சிம் கார்டுகள், 3 லேப்டாப்புகள், 9 ஹார்ட் டிஸ்குகள், 7 மெமரி கார்டுகள், 118 சிடி/டிவிடிகள், 1 டேப், 7 டைரிகள், 2 பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பேனர்கள், 1 டிவிஆர், 1 வாள், 1 கூரிய கத்தி, 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 குற்ற ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் சிலரது வீடுகளில் பயங்கரவாத ஆதரவு நோட்டீஸ்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதற்கான செல்போன் பதிவுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...