நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்துள்ள மலர்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்காவை, பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக பராமரித்து வருகிறது. இங்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் ரக மலர் நாற்றுகள் அனைத்தும் தற்போது பூத்து குலுங்குகின்றன. பூங்காவில், மலர் நாற்றுகளுக்கு, பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் தயார் செய்யப்பட்ட இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், செடிகள் செழித்து வளர்ந்துள்ளதுடன், வழக்கத்திற்கு மாறாக, மலர்களும் பெரிதாக பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக, சூரிய காந்தி, ரோஜா, செண்டு மல்லி உள்ளிட்ட மலர்கள் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கி வசீகரிப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.