அக்னிநட்சத்திரம் நாளை ஆரம்பம் : 28-ம் தேதி வரை வெயில் வறுத்தெடுக்கும்

கோவை : கோவையில் கடந்த மாதம் முதலே தாங்க முடியாத வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நாளை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கவுள்ளது.

கோவை : கோவையில் கடந்த மாதம் முதலே தாங்க முடியாத வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நாளை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கவுள்ளது.

கோவையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இடையில் ஒரு சில நாட்கள் பெய்த கோடை மழை ஓரளவிற்கு வெயிலை தணித்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் மதியத்திற்கு மேல் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் வாட்டியெடுக்கிறது.

இந்த நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் நாளை (மே 4) தொடங்குகிறது. இதனால், கோவையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து கோவை வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பேராசிரியர் ராமநாதன் கூறுகையில், "சென்ற ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தை உணர முடியாத அளவிற்கு அதிக மழை பொழிவு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு சராசரி மழை அளவைவிடக் குறைவாகவே இதுவரை பதிவாகியுள்ளது. எனவே, அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இம்முறை சராசரியாக இருக்கும்," என்றார்.

கோடை வெயிலை சமாளிக்க பழ ஜூஸ்கள், இளநீர், மோர், தர்ப்பூசணி மற்றும் வெள்ளரி பழங்கள் போன்ற நீர் சத்துள்ள உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதன் விற்பனை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கவுள்ளது.

மனிதர்கள் வெப்பத்தை சமாளிக்க குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது, அதிகமான தண்ணீர் குடிப்பது போன்று, பறவைகளுக்கும் அவரவர் வீட்டின் முற்றத்திலோ மொட்டைமாடியிலோ தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், வெயில் உச்சத்தில் இருக்கும் மதிய வேலைகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகத்தை மூடியபடியும், தொப்பி அணிந்தபடியும், பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி வெளியே செல்லவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...