கோவை : சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கு ஆதரவாக, பஞ்சாலை அதிபர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

ராயர்பாளையத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களின் உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு கூறிய டி.ஆர். பாலு, தேர்தல் நாளன்று தொழிலாளர்கள் வாக்கு அளிக்க ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், அங்குள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களை சந்தித்தார். தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்த அவர், இந்தியாவில் கலைஞரைப்போல் ஒரு முதலமைச்சரும், தலைவரும் இல்லை என்றும், 23-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் கூறினார்.

பின்னர், மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் முருகேசன், ஆதி தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச்செயலாளர் விடுதலை செல்வம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மு. இராமநாதன், விடுதலை விரும்பி, இரா.மோகன் ஆகியோரது இல்லங்களுக்குச் சென்று நலம் விசாரித்தார்.

முன்னதாக, பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் தி.மு.க.வின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது :- கருமத்தம்பட்டி பகுதியில் தொழிலாளிகளும், முதலாளிகளும் தி.மு.க.விற்கே ஆதரவாக இருக்கின்றனர். மிகப்பெரிய மாற்றம் தமிழகத்தில் ஏற்பட போகின்றது என்பதற்கு அடையாளமாக இது இருக்கின்றது. இப்படிப்பட்ட சந்திப்புகளின் போது, இதற்கு முன்னர் பணியாற்றிய பல தேர்தல்களை விட இந்த தேர்தலில் பெரும் வெற்றி பெறுவோம் என்ற மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, ஸ்டாலினை ஒட்டுமொத்தமாக அனைவரும் ஆதரிப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, என தெரிவித்தார்.
அ.ம.மு.க., தி.மு.க. இடையே ரகசிய உறவு இருக்கின்றது என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்து அவர் பதிலளித்ததாவது :- ரகசிய உறவு, இருட்டில் நடைபெறும் பேரம் என்பதெல்லாம் அவர்களுக்குதான். முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற பின்பும் அவர்கள் திருந்துவதாக இல்லை. அவர்கள் இருட்டறையில் பணியாற்றுகின்றனர். நாங்கள் வெளிச்சத்தில் பணியாற்றுகின்றோம். எங்களுக்கு எந்த ரகசியமும் இல்லை. அனைத்தும் வெட்ட வெளிச்சமாக இருக்கும்.

மேலும், ஓ.பி.எஸ். மிகுந்த அச்சத்தில் இருக்கின்றார். இதுவரை எத்தனை தேர்தல்கள் நடந்துள்ளது. பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்த போது, தமிழகத்தில் இருந்து இதற்கு முன்னர் யாரும் சென்றது இல்லை. தி.மு.க. தலைவர்கள் யாரும் பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்த போது சென்றது கிடையாது. ஆனால், ஓ.பி.எஸ். இங்கிருந்து பிரதமர் வேட்புமனு தாக்கலுக்கு ஓடுகின்றார். தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், தான் செய்த தவறுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தான் அவர் ஓடுகின்றார். ஓ.பி.எஸ். நிறையப் பயந்து போயிருக்கின்றார். 3 அ.தி.மு.க., எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை, என அவர் கூறினார்.