கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானையின் சடலம் வனத்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சுண்டப்பட்டி வனப்பகுதியில் சுமார் 15 முதல் 20 வயதுடைய பெண் யானையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. பவானி ஆற்றங்கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கிடந்த இந்த யானையின் உடலுக்கு, கால்நடை மருத்துவர் கே. ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், யானையின் கர்ப்ப கால கோளாறு காரணமாக உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.