கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு : கோவையில் நல்லசாமி சவால்

கோவை : கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என சூலூர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.


கோவை : கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என சூலூர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார். 

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு கதிரேசன் என்பவர் விவசாயத்தைச் சார்ந்த தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். நாட்டுப்பற்று உள்ளிட்ட 14 கோரிக்கைகள் முன்னிறுத்தி போட்டியிடுகிறார். மேலும், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், கள்-லும் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் தான் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்குகிறோம். 



இன்று காலை பிடித்து காசு கொடுப்பவர்கள் நாளை கழுத்தை நெறித்து பணம் கேட்பார்கள். விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து நீதி பெற வேண்டும். மதுவிலக்கு மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். உணவுப் பொருட்களின் இறக்குமதி ஒரு தேசிய அவமானமாகும். மேலும், விவசாயத்திற்கு தனியான பட்ஜெட் ஒதுக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் கதிரேசனை ஆதரித்து விவசாயத்தைக் காப்போம், நாட்டையும் காப்போம் என்ற உறுதிமொழியை முன்னிறுத்தினர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...