தோல்வியடைந்த அமைப்பான என்.ஐ.ஏ.வை கலைக்க வேண்டும் : பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தல்

கோவை : இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் தோல்வியடைந்த அமைப்பான தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.


கோவை : இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் தோல்வியடைந்த அமைப்பான தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முகமது இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார். 

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- திருச்சி, தஞ்சை, காரைக்காலில் உள்ள அலுவலகங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. நேற்று சோதனை மேற்கொண்டது. 2017-ம் ஆண்டு ஹாதியா கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார் என்று எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அரசியல் சாசனத்தின்படி, எங்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாததால், அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக எங்களை பலி வாங்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.

மேலும், பிப்ரவரி மாதம் திருபுவனம் ராமலிங்கம் கொலையை நாங்கள் தான் முதலில் கண்டித்தோம். அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எங்கள் அமைப்பில் இடம் இல்லை. நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினார்கள். ஆனால், அதற்கு முன்னரே ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் நோக்கம் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். இதனை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டிக்கிறது. நேற்றைய சோதனையைக் கண்டித்து திருச்சி, காரைக்கால், கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. என்.ஐ.ஏ. ஒரு தோல்வி அடைந்த அமைப்பு. அதனைக் கலைக்க வேண்டும். 

சுவாமி அசிமானந்தா தான் குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்ட பின்னும் அவர் விடுதலை செய்யப்பட்டார். இஸ்லாமியர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ. செயல்படுகிறது. இதனை சட்டரீதியாக சந்திப்போம். ராமலிங்கம் கொலை நடந்த அதே நேரத்தில் நாகை, தஞ்சையில் மட்டும் 6 கொலைகள் நடந்தன. ஆனால், அது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை. இலங்கை குண்டு வெடிப்பை கண்டிக்கிறோம். எங்கள் அலுவலகங்களில் ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. எங்களை மட்டும் குறிவைக்கும் என்.ஐ.ஏ.வை கலைத்திட வேண்டும். இதுவரை எந்த வழக்கிலும் என்.ஐ.ஏ. வெற்றி பெறவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...