நீலகிரி : நொண்டிமேடு பகுதியில் சமவெளி பகுதியில் வாழும் விஷம் இல்லாத கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்த வனத்துறையினர், அதனை கல்லட்டி பள்ளத்தாக்கு பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை மற்றும் பல்வேறு பாம்பு இனங்கள் வாழ்ந்து வருகினறன. இந்த நிலையில், உதகை நொண்டிமேடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீடு கட்டுவதற்காக சமவெளி பிரேதஷங்களில் இருந்து கட்டுமானப் பொருட்களான ஜல்லி, மணல், செங்கல் போன்ற பொருட்களை ஏற்றி வருகின்றனர்.

இவ்வாறு லாரிகளில் ஏற்றி வரும் போது வெப்பம் மிகுந்த சமவெளி பிரதேசங்களில் இருந்து எடுத்து வரும் பொருட்களுடன் பல்வேறு பாம்புகள் உதகைக்கு வருவது வழக்கமான நிலையில், உதகை நொண்டிமேடு பகுதியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனத்தில் இருந்து விஷம் தன்மையற்ற கொம்பேரி மூக்கன் பாம்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர், அந்த பாம்பை பிடிக்க வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், அந்த பாம்பை உயிருடன் மீட்டு கல்லட்டி பள்ளத்தாக்கில் கொண்டு விட்டனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.