கோவை : கோவை ரயில்நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பட்டுள்ள இடநெருக்கடியை சமாளிக்க ரயில்நிலையத்தின் பின்புறம் கட்டப்பட்டு வரும் மல்டி லெவல் இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமானப் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்னக ரயில்வே சேலம் கோட்டம் கட்டுப்பாட்டில் கோவை ரயில்நிலையம் உள்ளது. இங்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ரயில்களும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்கின்றனர். கோவை ரயில்நிலையத்தில் சராசரியாக தினமும் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பயணிகள் நிறுத்தி செல்கின்றனர். ஆனால், வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாமல் வெயில் மற்றும் மழையில் திறந்தவெளியில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும், போதிய இடவசதி இல்லாததால், வாகனங்களை நிறுத்தி விட்டு, ரயிலை பிடிப்பதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு கோவை ரயில்நிலையத்தின் பின்புறத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த மல்டி லெவல் இருசக்கர வாகன நிறுத்துமிடம் ரூ. 2.1 கோடி செலவில் துவக்கப்பட்டது. இந்த பணி பிப்ரவரி மாதமே நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பணிகள் தாமதாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்த மாதம் இறுதிக்குள் இந்த மல்டி லெவல் இருசக்கர வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவடையும் எனவும், 800 இருசக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்தலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.