நீலகிரி : குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், சிறந்த பழத்தோட்டத்திற்கான தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

குன்னூர் சிம்ஸ்பூங்காவில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 61-வது பழக்கண்காட்சி நடக்கிறது.

இதற்காக சிறந்த பழத்தோட்டத்திற்கான தேர்வு இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான விண்ணப்பப் படிவம், குன்னூர், உதகை, கூடலூர், கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்கள், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 7-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

இதில், சிறந்த பழத்தோட்டம் அமைக்கும் ஓவ்வொரு பிரிவிற்கும் பதிவு கட்டணமாக 75 ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் குன்னூரில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர், அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.