எதிர்கட்சிகள் ஆளும்கட்சிக்கும், பொதுமக்களுக்கும் எதிரிகட்சியாக செயல்படுகிறது : கோவையில் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டு

கோவை : எதிர்கட்சிகள் ஆளும்கட்சிக்கும், பொதுமக்களுக்கும் எதிரிகட்சியாக செயல்படுவதாக சூலூரில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.

கோவை : எதிர்கட்சிகள் ஆளும்கட்சிக்கும், பொதுமக்களுக்கும் எதிரிகட்சியாக செயல்படுவதாக சூலூரில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார். 

சின்னியம்பாளையம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், சூலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- நடைபெறக்கூடிய இடைத்தேர்தல் முக்கியமான தேர்தல் என்பதை உணர்ந்து நன்மை செய்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் அடிமட்ட மக்களுக்கு திட்டங்கள் முழுமையாக சேர்ந்துள்ளது. மக்கள் விரும்பும் ஆட்சியாளர்களாக அ.தி.மு.க.,வினர் உள்ளனர். பல்வேறு தரப்பினருக்காக உழைக்கும் அணியாக அ.தி.மு..க. அணி செயல்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றி கூட்டணி. இது வேஷம் போட்டு கோஷம் போடும் கூட்டணியல்ல. மத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்து, வளர்ச்சிக்கு அடித்தளம். நிலுவையுள்ள திட்டங்கள் நிறைவேற அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

எதிர்கட்சிகள் ஆளும்கட்சிக்கும், பொதுமக்களுக்கும் எதிரிகட்சியாக செயல்படுகிறது. எதிரிகட்சியாக செயல்படுவது ஏற்புடையதல்ல. மக்களும் விரும்பவில்லை. மக்கள் திட்டங்களை எதிர்கட்சிகள் முடக்குகின்றன. எதிர்கட்சிகள் தோல்வி பயத்தில் உள்ளன. மக்கள் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு கொண்டிருக்கிறார். ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்ட விசைத்தறி, ஜவுளி தொழில் மேம்பட மத்திய பா.ஜ.க. அரசு, மீண்டும் பொறுப்பேற்றதும், வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வளமான, பலமான, வளர்ச்சியடைந்த தொகுதியாக சூலூர் மாற அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமிக்கு வாக்களிக்க வேண்டும், என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...